Daily Devotional for 16 ஜூலை
ஆவியிலே நிறைந்திருங்கள். (எபே 5:18)
எந்த அளவிற்கு சுயத்தின் ஆவி நம்மில் இருந்து நீக்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு நாம் ஆவியில் நிரப்பப்படுவதும் நிகழ்கிறது. கீழ்ப்படிதலும், விசுவாசமும் உள்ள ஆவியினாலே நிரப்பப்படுவோம். தேவனுக்கென்று தங்களைத் தத்தம் செய்தவர்களிடம் கீழ்ப்படிதலின் ஆவியையே தேவன் எதிர்பார்க்கிறார். தேவன் பேரில் முழு விசுவாசமுள்ளவர்களே அவருக்குப் பிரியமானவர்கள். இவர்கள் புது ஆவியைப் பெற்றுத் தங்களைச் சுத்திகரித்துக் கொண்டு, தங்கள் வார்த்தைகளினால் மட்டுமல்ல, சிந்தனைகளிலும் செய்கைகளிலும் ஆவியிலே நடத்தப்படுவார்கள். (ரோம. 15:13-16) Reprints Reference 2456:2
சீஷருடைய மனதை திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்தி சொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும் என்று சொன்னார்கள். (அப் 14:22)
அநேக உபத்திரவங்களின் வழியாய் என்று சொல்லுகின்ற பொழுது இந்த “உபத்திரவம்” என்ற வார்த்தையை விளைந்த தானியங்களை போரடிப்பதற்கு ஒப்பாக சொல்லலாம். கதிர்களை ஓங்கி அடிக்கும் பொழுது தானியம் தனியாகவும், உமி தனியாகவும் பிரிகிறது. தானியமணி உமியிலிருந்து விடுபட அடிபட வேண்டியிருக்கிறது. இதுபோலவே கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்த ஜனங்கள் கோதுமை மணிகளாக அவருடைய களஞ்சியத்தில் சேர்க்கப்படவேண்டுமானால் இப்படிப்பட்ட உபத்திரவத்தை அடைந்தே தீர வேண்டும். கோதுமை மணிக்கு ஒப்பானது புதிய சுபாவம். இந்த உலகத்திற்குரிய நிலைமை உமிக்கு ஒப்பானது. பூமிக்குரிய நிலைமையாகிய உமி நீக்கப்பட்டாலொழிய கோதுமை மணி தோன்றாது. கோதுமை மணி தோன்ற வேண்டுமானால் அது அடிக்கப்பட வேண்டும், பிரிக்கப்பட்டாக வேண்டும். நாம் இந்த உலகை விட்டு, உலகநோக்கத்தை விட்டு பிரிந்தாலொழிய தெய்வ சிந்தையில், தேவ வழியில் செல்லமுடியாது. சோதனைகளையும், உபத்திரவங்களையும் எவ்வளவாய் பொறுமையாய்ச் சகிக்கிறோமோ அவ்வளவாய் நித்திய மகிழ்ச்சியை நாம் சுதந்தரித்துக் கொள்ள முடியும். நமக்கு விடப்படுகின்ற தொல்லைக் கஷ்டங்கள், அவற்றை சந்தித்த நமது போதகரும் குருவுமாகிய இயேசுவை அறியாமல் வராது. பாடுகளை அனுபவித்த கர்த்தராகிய இயேசுவே நம்குரு. இந்தப் பாடுகளினாலும் நாம் மகிமையடைகிறோம். Reprints Reference 2213:5
⤡
என்னுடைய அதிகாலை சிந்தையின் விருப்பம் என்னவெனில்,
கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன். நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன். (சங்கீதம் 116:12-14)
\"பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள்.\" (சங்கீதம் 50:5) என்ற தெய்வீக அழைப்பை நினைவு கூர்ந்து நான் தீர்மானிப்பது என்னவெனில், என்னை வழி நடத்தும் தேவனுடைய கிருபையினால், இன்று பரிசுத்தவானாகிய நான், என் பொருத்தனைகளை நிறைவேற்றி தொடர்ந்து என் மாமிசத்தையும் அதன் விருப்பங்களையும், தியாகம் செய்வதினால் பரலோக சுதந்தரத்தை என் இரட்சகரோடு சுதந்தரிப்பேன்.
நான் எல்லோரிடத்திலும் எளிமையாகவும், நேர்மையுள்ளவனாகவும் இருக்க முயற்சி செய்வேன். நான் என் சுய கீர்த்தியையும் கனத்தையும் தேடாமல், மகிமையையும், கனத்தையும் தேவன் ஒருவருக்கே செலுத்துவேன்.
என் உதடுகளினால் நான் தேவனை ஜாக்கிரதையாக கணம் பண்ணுவேன். என் வார்த்தைகள் எல்லோருக்கும் மிருதுவாகவும், ஆசீர்வாதமாகவும் இருக்கும்படி முயற்சி செய்வேன். நான் தேவனுக்கும் சத்தியத்திற்கும், சகோதரர்களுக்கும், மற்ற எல்லோருக்கும் பெரிய காரியங்களில் மாத்திரமல்ல, வாழ்க்கையின் சிறிய கரரியங்களில் கூட உண்மையாக இருக்க நாடுவேன்.
தெய்வீக பாதுகாப்பில் என்னுடைய உயர்ந்த நன்மைக்காக எல்லா விருப்பங்களையும் நீக்கும் தெய்வீக கிருபையில் நம்பிக்கை வைத்து, சுத்தமான இருதயம் உள்ளவனாக இருப்பதற்கு மாத்திரம் நாடாமல், எல்லா மன விசாரத்தையும், எல்லா அதிருப்தியையும், எல்லா சோர்ந்து போகுதலையும் முற்றிலும் வெறுப்பேன்.
என் வாழ்வில் தேவனுடைய தெய்வீக கிருபையினால் அனுமதிக்கப் படுவதை குறித்து நான் முறுமுறுக்கவோ சலிப்படையவோ மாட்டேன். ஏனென்றால், “எது நடந்தாலும் தேவனிடத்தில் உறுதியான விசுவாசமும், நம்பிக்கையும், எனக்கு உண்டு“
R 5165:3
⤡
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய பிரமாணம் என் இருதயத்தை மென்மேலும் ஆட்கொண்டு, ‘உம்முடைய சித்தம் அழிவுக்குரிய என் மாம்சத்தில் நிறைவேற்றப்படுவதாக. தேவையானபோது உதவியாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ள உம்முடைய கிருபையைச் சார்ந்து, இந்த வாக்குறுதியை, எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஏறெடுக்கிறேன்.
அறுவடை வேலையின் பொதுவான காரியங்களையும், அதில் குறிப்பாக நான் உரிமையாக, உற்சாகத்துடன் பங்கெடுக்க எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற என்னுடைய பங்கையும், மற்றெல்லா இடங்களிலும் உள்ள உடன் வேலையாட்களுடைய பங்கையும், அனுதினமும் பரலோகக் கிருபாசனத்தண்டையில் நினைவு கூறுவேன்.
இவற்றுடன், உமக்கும் உம்முடைய பிரியமான மந்தைக்கும் ஊழியம் செய்ய திராணியுள்ளவனாகும் நோக்குடன் கூடுமானவரையில், என்னுடைய சிந்தனைகளையும், வார்த்தைகளையும், கிரியைகளையும் ஆழ்ந்து பரிசோதனை செய்வேன் என்று உறுதி கூறுகிறேன். இரண்டு எஜமானர்கள் இருப்பதை நினைவில் கொண்டு, அசுத்த ஆவிகளோடு தொடர்புடைய எல்லா துர்கிரியைகளையும் எதிர்ப்பதற்கு விழித்திருந்து, இவைகளெல்லாம் எதிராளியானவனுடைய கண்ணிகள் என்று உணர்ந்து, எல்லா நியாயமான வழிகளிலும் எதிர்ப்பேன் என்று உம்மிடம் உறுதி கூறுகிறேன்.
மேலும், கீழுள்ள விதிவிலக்குத் தவிர, எல்லா நேரத்திலும், எல்லா இடத்திலும், எதிர்பாலினரிடத்தில் தேவனுடைய ஜனங்களாகிய சபையார் முன்னிலையில் நான் எப்படி நடந்து கொள்கிறேனோ அப்படியே, தனிமையிலும் நடந்து கொள்வேன் என்று உறுதி கூறுகிறேன்.
விதிவிலக்கு - சகோதரராக இருக்கும் பட்சத்தில் - மனைவி, குழந்தைகள், தாய் மற்றும் உடன்பிறந்த சகோதரிகள்; சகோதரிகளாக இருக்கும் பட்சத்தில் - கணவன், குழந்தைகள், தந்தை மற்றும் உடன்பிறந்த சகோதரர்கள்.
மேலும், கூடுமானவரையில், அறை கதவுகள் அகலமாக திறந்திருக்காத பட்சத்தில், எதிர்பாலினரோடு ஓரே அறையில் தனிமையில் இருப்பதை தவிர்ப்பேன்.
R4191:5,6; 4263:6; 4382:3; 4383:1
⤡
நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்.
நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவானயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.
எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.
அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.
சகலத்தையும் தாங்கும், சகலத்தையும விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்க தரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.
நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதல் குறைவுள்ளது. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். நான் குழந்தையாயிருந்த போது குழந்தையைப் போல பேசினேன், குழந்தையைப் போலச் சிந்தித்தேன், குழந்தையைப் போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். இப்பொழுது கண்ணாடியில் நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்து கொள்ளுவேன்.
இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.
R2205:6; R2234:5; R2240:1
⤡
ஒரு நிமிடம் உன்னுடைய கண்களை மூடி, பாவத்தினால் இன்னும் நடைபெற்று கொண்டிருக்கும் துன்பம், சீரழிவு, விசனம் மற்றும் கவலைகள் அனைத்தையும் உன்னுடைய கண்முன் நிறுத்தி, உன்னுடைய மனக்கண்களின் முன் பரிபூரணமான பூமியின் மகிமையை நிறுத்துவாயாக. பாவத்தின் ஒரு சிறு கறை கூட புதிய சமுதாயத்தின் அமைதியையும், சமாதானத்தையும் கெடுக்காது; ஒரு கேடான சிந்தனையோ அன்பற்ற பார்வையோ, வார்த்தையோ இருக்காது. ஊற்றைப் போல் சுரக்கும் அன்பும், மற்ற்வர்களுக்கு சிநேகமான மறுமொழிதலும், உதாரகுணமும் அங்கேயிருக்கும். வியாதி அங்கே இருப்பதில்லை. வலியோ, வேதனையோ, அழிவோ, அதற்கான பயமோ அங்கே இருப்பதில்லை. நல்ல உடல் நலம், இதுவரை கண்டிராத மனிதனுடைய பூரண அழகும், பரிபூரண மனுக்குலமும் அங்கே நீடிய அன்பும் நிலைத்திருக்கும் உள்ளான பரிசுத்தமும் மனதிலும் நீதியின் பூரணமும் அங்கே காணப்பட்டு ஒவ்வொன்றும் தெளிவான நிதானத்துடனும் மகிமைப்படுத்தும். இப்படித்தான் பூமியின் சமுதாயம் இருக்கும். இப்படியாக உயிர்த்தெழுதலின் வேலைகள் முடிந்த பிற்பாடு, இழந்தவருடைய அழுகையும் கண்ணீர் யாவையும் துடைக்கப்படும். வெளிப்படுத்தல் 21:4
⤡
சங்கீதக்காரன் கூறுகிறதாவது : “கர்த்தர் எல்லோர் மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின் மேலுமுள்ளது.\"
இந்த வாக்கியம் சகலத்தையும் உள்ளடக்கிய அண்ட சராசரத்தின் உச்ச எல்லைகளையும், அதே சமயம் சிறிய மற்றும் மிகப் பெரிய ஜீவராசிகளையும் தன்னுள் அடக்கியுள்ளது. அனைத்து சிருஷ்டிகளும் அவருடைய மேற்பார்வையில் இருக்கிறது. நம் தேவனாகிய யேகோவா, அகில உலகிற்கும், ராஜாதி ராஜாவாக இருக்கிறார். அந்த உயர்ந்த ஸ்தானத்திற்கே உரிய பொறுப்புகளுக்கு அவருடைய ஞானம், வல்லமை, நற்குணம் மற்றும் பரந்த உள்ளமானது அபரிமிதமாக நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட பொறுப்பிற்கு ஏற்றவராக இருப்பவரின் மன ஆற்றலை புரிந்து கொள்ள எடுக்கப்பட்ட முயற்சியில் மனித மூளை நிலை தடுமாறுகிறது. ஒருபோதும் தோல்வியடையாத ஞாபகத்திறன்; ஒருபோதும் தவறாத நியாயத்தீர்ப்பு; ஒருபோதும் தோல்விக்கு இடமில்லாமல் நித்தியத்துக்கும் திட்டமிடுகிற அதேசமயம் யுகா யுகத்திற்கும் அத்திட்டத்தை பிழையின்றி துல்லியமாக நிர்ணயிக்கும் ஞானம்; உயிரற்ற மற்றும் உயிருள்ளவைகளாகிய எதிர்க்கிற யாவற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்தி அவைகளை தம்முடைய பிரம்மாண்டமான திட்டம் நிறைவேற இசைவாய் நடத்தும் வல்லமை மற்றும் திறன்; அண்ட சராசரத்தை காக்கிறதில் வருகிற அழுத்தத்தில் சோர்வுற்றிராத நித்திய கண்காணிப்பு; ஒரு போதும் உறங்காத கண்கள், எப்போதும் திறந்திருக்கிற காதுகள், எல்லா தேவைகளையும் அறிந்திருக்கிறவரும் தம்முடைய பரந்து விரிந்த ஆளுகையில் உள்ள அனைத்து காரியங்களிலும் நிறைந்திருப்பவரை ஒரு கனம் எண்ணிப்பாருங்கள். R1560:2
⤡
அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.
அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:
ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.
இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.
நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.
விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
R2205:6; 2234:5; 2240:1
⤡
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.
அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.
அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். R5653